20
Oct
அகடு திரை விமர்சனம் இயக்குநர் - S சுரேஷ் குமார் நடிகர்கள் - ஜான் விஜய், சித்தார்த், ஶ்ரீராம், அஞ்சலி நாயர் கதை - சுற்றுலாவிற்கு செல்லும் இடத்தில் ஒரு குடும்பம் அங்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் பழகுகிறது. மறுநாள் அவர்களின் பெண்குழந்தையும் ஒரு இளைஞனையும் காணவில்லை அந்த பெண் குழந்தைக்கு என்னவானது என்பதே கதை. ஒரு கதையை சொல்லும் போது எதை சொல்கிறோம் அது திரையில் எவ்வாறு வரும் அதன் அறம் என்ன என்கிற நோக்கம் மிக முக்கியம். அல்லது இந்தப்படம் ரசிகர்களை மகிழ்விக்க என்றால், அதற்கான கதையாவது படத்தில் இருக்க வேண்டும். இந்தப்படத்தில் படம் என்ன சொல்ல வருகிறது என்கிற நோக்கம் சரியாக அமையவில்லை இது ஒரு திரில்லர் திரைப்படம், ஒரு கொலை நிகழ அதனை சுற்றி என்ன நடந்தது என்பதை சுவாரஷ்யமாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த சுவாரஷ்யம் ரசிகர்களிடம் சுத்தமாக கடத்தப்படவில்லை, திரைப்படத்திற்கென்றே ஒரு மிகப்பெரும் பரப்பு இருக்கிறது,…