தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா.. எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது. ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர் கோபி சாந்தா. டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.. அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை. கடைசியில் திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்.. தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்.. கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்டவரை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ…
Read More
பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

கோலிவுட்டில் பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த " த பாடி " என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது. பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி…
Read More
தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ஒரு நடிகை  – ஷாதிகா!

தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ஒரு நடிகை – ஷாதிகா!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் 'நெஞ்சில் துணி விருந்தால்' படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர் தான்  இந்த ஷாதிகா. படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும்  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் . இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா . சென்னைப் பெண்ணான  இவர், லயோலாவில் பி.டெக் படித்து  முடித்தவர். இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் 'மங்கை' தொலைக்காட்சித்  தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு…
Read More
அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

பிரபல நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி சென்னை டிரான்ஸ் கார் நிறுவனத்தில் இருந்து ஏ கிளாஸ் வகை பென்ஸ் காரை ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த காரை புதுச்சேரி முகவரி ஒன்றை கொடுத்து அந்த மாநிலத்தில் இருந்து பதிவு எண் பெற்று நடிகை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முகவரி என்று நடிகை அமலா பால் கொடுத்தது போலி முகவரி என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரி…
Read More
கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் . ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர்…
Read More
சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இன்று இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு…
Read More
ஹன்சிகா பிறந்த நாள் கொண்டாட்டம்!

ஹன்சிகா பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிர்ந்துள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' என புன்னகையுடன் கூறினார் ஹன்சிகா.
Read More
திறந்த புத்தகமாக திகழ்ந்த மர்லின் மன்றோ!

திறந்த புத்தகமாக திகழ்ந்த மர்லின் மன்றோ!

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை.மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடைய கருத்துகள் எல்லாமே…
Read More