09
Nov
ஒரு படத்தின் ஷூட்டிங் என்றால் மினிமம் 90 நாள் என்று சொல்லி வந்த சூழலில் 46 நாட்களில் ஒட்டுமொத்த 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. கொரோனா ஊரடங்கில் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. ஆகையால், மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்தின் பணிகளைக் கேரளாவில் தொடங்கினார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம்…