மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென் இந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காம படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலக் கட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்பதினராலேயே புறக்கணிக்கப் பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு…
Read More