‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்:  லைகா  தகவல்

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: லைகா தகவல்

2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Follow Raju Mahalingam @rajumahalingam 2.0 promotion kick starts......#2point0 1:04 PM - 24 Jun 2017 அந்த வீடியோ பதிவில், '2.0' படத்தை விளம்பரப்படுத்த விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான 3டி தொழில்நுட்பத்திலான படம் என்பதால், கிராபிக்ஸ்…
Read More