21
Apr
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியாவில் கலந்து கொண்டுள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், போன ஒரு மாத காலமாகவே அஜித் ரசிகர்கள் தூக்கத்தைத் தொலைத்து சுறுசுறுப்பாகியிருக்கிறார்கள். எல்லாம் வருகிற மே மாதம் 1 ம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் வந்த உற்சாகம் தான் தான். ஒரு பக்கம் தல பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட வேண்டுமென்கிற முனைப்பு இருந்தாலும் அன்றைய தினம் அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகுமா என்று காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ‘விவேகம்’ படத்தின் டீஸர் ம்22 1-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக…