பி. எஸ். வீரப்பா!

பி. எஸ். வீரப்பா!

எத்தனை பேருக்கு பி.எஸ்.வீரப்பாவை நினைவு இருக்கிறதோ தெரியவில்லை. இவர் அதிகமாக ஏற்று நடித்தது என்னவோ வில்லன் பாத்திரங்கள்தான். ஆனால் மிகை நடிப்பானாலும் அது அழுத்தமான நடிப்பின் பதிவு. அன்றைய கால கட்டத்தில் அத்தகைய அவரின் நடிப்புத்தான் திரையில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. பி.எஸ்.வீரப்பா திரையில் சிரிக்க ஆரம்பித்தால் அரங்கில் இருக்கும் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்று ஒரு நிலை இருந்தது. எம்ஜிஆரை வைத்து யாராவது அரச படம் தயாரிக்க முனைந்தால் முதலில் கூப்பிடு வீரப்பாவை எனும் நிலையில் அட்டகாசமான வில்லனாக எம்ஜிஆருக்குப் பொருந்தி இருந்தார். எத்தனையோ வில்லன்கள் எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலும், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா என்றோரு கூட்டு பலராலும் ரசிக்கப் பட்டிருந்தது. எம்ஜிஆர் , தனது கடைசிப் படமான ´மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்` படத்திலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு வில்லன் பாத்திரம் கொடுத்திருந்தார் என்பதில் இருந்து அது மேலும் உறுதியாகிறது. ´வஞ்சிக்கோட்டை வாலிபன்` என்றொரு திரைப்படம். ஜெமினி வாசன் தயாரித்தது.…
Read More