“உணவு அரசியலும் கலகல கமர்சியலும்” விஜய்சேதுபதியின் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்!

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன்  வழங்கும் விகடன் அவார்ட்ஸ்   மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.  இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.  இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது, "இங்கு சுட்டவர்களும்  குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்" என்றார்.
Read More
ஜல்லிக்கட்டு காளை அவமதிப்பு?- விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டு காளை அவமதிப்பு?- விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

ஐந்தாறு படங்களில் கமிட்டாகி  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. வருடம் தோறும் 6க்கும் அதிகமான படங்களில் விறுவிறுப்பாக நடித்து அதை ரிலீஸ் செய்தும்  வருகிறார். விக்ரம் வேதா, 96, அநீதி கதைகள், சீதகாதி, புரியாத புதிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார். இதில், இவருக்கு ஜோடியாக தன்யா நடிக்கிறார். வில்லன் ரோலில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் அவர், ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது கருப்பன் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…
Read More