விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் பேசும் போது, “ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும் .ஊடகங்கள் திரைப்படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் விமர்சனம் எழுதுவது உங்கள் வேலை, உங்கள் உரிமை…
Read More