10
Feb
ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் "கோல்ட் டிக்கர்ஸ்.' வசூலை அள்ளிக் குவித்த "மேட்ரிக்ஸ்', "ஹாரி பார்ட்டர்', "பேட்மேன்' போன்ற பல படங்களைத் தயாரித்த நிறுவனம் இது. இந்த நிறுவனம் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு முன், பாலிவுட் படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களை இதுவரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டதில்லை. தமிழ்ப்படத்தின் பெயர் "கனவு வாரியம்.' தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்வெட்டை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது. காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாவும் நடிக்கிறார்…