05
Nov
நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்தி ருக்கிறது. முன்னதாக 'இப்படை வெல்லும்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், "'மெர்சல்' படத்தின் முழு விளம்பரம் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய 'இப்படை வெல்லும்' படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். இச்செய்தி சமூகவலைத் தளத்தில் பகிரப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.இப்படி ஹெச்.ராஜாவின் பதிலால் இயக்குநர் கவுரவ் சந்தோஷமடைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹெச்.ராஜா சார் தங்களுடைய விளம்பரப்படுத்துதலுக்கு நன்றி. எங்களுடைய முழு குழுவும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கலக்குங்க சார். கவுத்துறாதீங்க" என்று…