19
Feb
தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் .அவர் பெயர் சபிஜே. இவர் சர்வதேச மாடல். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர். நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருப்பவர். இனி சபிஜே வுடன் பேசுவோம். உங்கள் முன்கதைச் சுருக்கம் கொஞ்சம் சொல்லுங்களேன்? நான் தமிழ்ப் பெண்தான். எங்களுக்கு பூர்வீகம் ஸ்ரீலங்கா. அங்கிருந்து அப்பா அம்மா எல்லாரும் நியூஸிலாந்து போய் தங்கிவிட்டனர். நான் அங்குதான் பிறந்தேன். படித்தது ஆஸ்திரேலியாவில். பி.காம் முடித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது. நான் நியூஸிலாந்து ,ஆஸ்திரேலியா என்று இரு நாடுகளிலும் பல மியூசிக் வீடியோக்களில் தோன்றியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அரசு விளம்பரம் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்தேன். எனக்கு பங்கரா நடனம்…