16
Mar
தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா) ஏ.ஆர். ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, 'புலி' படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது "மாம்" (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்…