13
Sep
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இறுதியாக ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே அடுத்த மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்கள். நடிகர்களாக நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இப்படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னரே மன்மதன் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கின்றனர். ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு…