போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

ஏஸ்டிஆர் ஆன சிம்புவின் `AAA' படத்திற்குப் பிறகு, அரவிந்தசாமியுடன் `நரகாசுரன்' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை ஸ்ரேயா சரண், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக `பைசா வசூல்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ரேயா. பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காக போர்ச்சுகல் சென்றிருந்த ஸ்ரேயா, படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பகுதிகளை சுற்று பார்த்திருக்கிறார். இதையடுத்து  படக்குழு இந்தியா திரும்பிய நிலையில், போர்ச்சுக்கல்லின் சந்து பொந்துகளுக்குள் சென்றுவந்த அனுபவத்தைச் சொன்னார் ஸ்ரேயா. “‘இந்த படக் கதைப்படி, நான் போர்ச்சுக்கல்ல ஒர்க் பண்றவளா நடிக்கிறேன். அவளுக்கு என்ன மாதிரியான பிரச்னை வருதுன்னு கதை போகும். இதுக்காக போர்ச்சுக்கல் போனேன். இதுவரை தென்னிந்திய படங்கள் காண்பிச்சிருக்காத லொகேஷன்களை இந்தப் படத்துல பார்க்கலாம். ஷூட்டிங்கை முடிச்சுட்டு தோழிகளோட டூர் போயிட்டேன். லிஸ்பன்…
Read More