17
Jul
வி.பீப்பிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘வீதிக்கு வந்து போராடு’ இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தன்னெ ழுச்சியாக போராடினர். அதிலிருந்து தமிழகத்தில் போராட்டங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குடிநீர் பிரச்னை போராட்டம், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்காக நடத்தும் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தற்போது கதிராமங்கல போராட்டம் என தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை போராட்டத்துக்கே செலவழித்து வருகின்றனர். மக்கள் உயிரை குடிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது தெரிந்திருக்கிறது. . ஆக இப்போது பல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்க்க முடியாது என்பதுதான் இப்போதைக்கு நம் நாட்டின் உண்மையான நிலைமையாக உள்ளது. இதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் இந்த ‘வீதிக்கு வந்து போராடு’ திரைப்படம். படம் குறித்து கேட்ட போது இன்று நம் நாட்டில் நாளொரு பிரச்சினையும், பொழுதொரு போராட்டமுமாக இருந்து வருகிறது. எதையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது. போராட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.…