25
Mar
இலங்கை, யாழ்ப்பாணத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை தமிழ் மக்களுக்கு 150 வீடுகள் லைகா நிறுவனம் சார்பில் கட்டித்தர திட்டமிட்டிருந்தது. வீடு வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்தமிழ் மக்களுக்கான வீட்டு சாவியினை அவர்கள் கையால் கொடுக்கும் படி விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் இவ்விழா ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்திடம் அவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் சூப்பர் ஸ்டார் அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று இப்பயணத்தை ரத்து செய்து கொண்டார். இதை அவர் அதிகார பூர்வாமாக தன் கடிதத்தின் மூலம் இன்று தெரிவித்தார்.