02
Nov
நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை…