தமிழகத்துக்கு தண்ணீர்! – கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி கடிதம்

தமிழகத்துக்கு தண்ணீர்! – கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி கடிதம்

எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தற்கு நன்றி என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''நாம் அனைவருமே ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை கள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலோ பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நீர் பாசன்ஆண்டாக கணக்கிடப்ப டுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜூன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோபர் 30.17 டிஎம்சி, நவம்பர் 16.05 டிஎம்சி, டிசம்பர் 10.37 டிஎம்சி, ஜனவரி 2.51 டிஎம்சி, பிப்ரவரி 2.17 டிஎம்சி,…
Read More