19
Apr
பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது.இந்நிலையில் பாகுபலி 2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால்…