அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற  தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான 'வம்சம்' முதல் 'ஆறாது சினம்' திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக  பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது…
Read More