முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

 ஏற்கெனவே மத்திய அரசின் ஜி எஸ் டி வரி வந்த சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கேளிக்கை வரியை ரத்து செய்யம்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந் நிலையில் நடிகையும், சினிமா டைரக்ட ருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திரையுலகினரின் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார். அதாவது “திரைப்படத் தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்து விட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள். படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்ப ரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரி விலக்கு கேட்டு…
Read More
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு "நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். எடிட்டிங் : பிரேம் பாடல்கள் : இளையகம்பன் ஸ்டண்ட் : பம்மல் ரவி இசை : ஜான் பீட்டர் ஒளிப்பதிவு : பாஸ்கர் நடனம் : ரவிதேவ் தயாரிப்பு : R.மணிமேகலை எழுதி இயக்கி இருப்பவர் - A.M.பாஸ்கர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன் ".நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷ யங்களை பேச மாட்டேன்.ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும்  இழப்பு. ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும்…
Read More