22
Jun
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். மதன்கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் படத்தொகுப்பு, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் வாசுகி பாஸ்கர். சிம்பு அப்துல் காலிக் (இது இசையமைப்பாளர் யுவனின் பெயராக்கும்) என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாநாடு படத்தில் இடம்பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப்…