27
Jun
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, நடிகர் ஆனந்தராஜ் ‘மரகத நாணயம்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அறிமுக இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி பேண்டசி படம் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால், சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, ’மரகத நாணயம்’ படத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் அழைத்துச் சென்றார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ‘மரகத நாணயம்’ படத்தை பார்த்த மாணவிகள், சிரித்து மகிழ்ந்தனர். நடிகர் ஆனந்தராஜ் தனது குடும்பத்தாருடன் மாணவரிகளுடன் சேர்ந்து படம் பார்த்தார். படத்தின் இயக்குநர்…