01
Feb
இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…