தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆடியோ ரிலீஸ் விழா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆடியோ ரிலீஸ் விழா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். விழாவில் பேசிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்கள்…
Read More