15
Jul
2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழ் திரையுலகினர் பலரும் பெரும் மகழ்ச்சியில் உள்ளனர். விருதுகள் அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இந்த வேளையில் இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் திரையுலகிற்கு விருதுகள் அறிவித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதில் என்னுடைய படங்கள் எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு தேர்வுக் குழுவினருக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தேசிய விருது பெற்ற 'அழகர்சாமியின் குதிரை' மற்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட 'நான் மகான் அல்ல' க்ளை மாக்ஸ்…