கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி!

கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி!

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர் . அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். சாம்பிளுக்கு சொல்வதென்றால் ஒரு முறை கரு.பழனியப்பன் பேசிய போது, “ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பற்றி ஒரு கூட்டத்துக்கு அழைத்தார்கள். ஆனால் இந்த நாட்டில் மரபணு மாற்ற  பட்ட முதலமைச்சர் இருக்கார், அதைப்பற்றி யாரும் இங்கு கவலை படவில்லை. மத்திய அரசு அதைத்தானே செய்கிறது. முதலமைச்ச ருக்கு ஒரு வீரியம் இருக்கும், ஒரு குணம் இருக்கும். ஆனால் அதெல்லாம் வேண்டாம் என ஊசியப்  போட்டு மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சரைத்தான் வச்சிருக்காங்க. மக்களைப் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட ஆடாக…
Read More
ராதா மோகனோடு மீண்டும் இணைஞ்சிட்டார் அருள்நிதி!

ராதா மோகனோடு மீண்டும் இணைஞ்சிட்டார் அருள்நிதி!

உணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும் இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி, 'பிருந்தாவனம்' படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர். "பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன். தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் நாங்கள் படத்தின் வேலைகள்…
Read More
அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற  தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான 'வம்சம்' முதல் 'ஆறாது சினம்' திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக  பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது…
Read More