உண்மையான சம்பவம்தான் ‘அபியும் அனுவும்’ – இயக்குநர் விஜயலக்‌ஷமி பேட்டி!

உண்மையான சம்பவம்தான் ‘அபியும் அனுவும்’ – இயக்குநர் விஜயலக்‌ஷமி பேட்டி!

ஒரு சாதனையாளருக்கு பிள்ளையாக பிறந்து வளர்வது ஒரு சுகமான சுமையாக இருக்கும். அவர்களுக்கு எந்த துறையிலும் நுழைவு எளிதாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கான செயல்முறை ஒன்றாகத்தான் இருக்கும். இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் மிக பெரிதாக ஆகி அதுவே ஒரு சுமையாக மாறும். விரைவில் ரிலீசாக இருக்கும் 'அபியும் அணுவும்' படத்தை மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் B R பந்துலுவின் மகள் B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான B R விஜயலக்ஷ்மி 22 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.'டாடி' என்ற மலையாள படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையும் அவரை சார்ந்தது. அவர் தற்பொழுது 'அபியும் அனுவும்' என்ற துணிச்சலான காதல் படத்தை இயக்கியுள்ளார். '' லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்தே 'அபியும் அனுவும்' கதையை எழுதினேன். இது ஒரு துணிச்சலான, அழகாக சொல்லப்பட்டுள்ள கதை. உண்மை…
Read More