15
Jul
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் 'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். மாஸ்டர் தினேஷ்! கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுக மாகிறார். தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுக மாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இந்த தலைப்பே சரி என சர்டிஃபிகேட்…