கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படம்!

கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படம்!

பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்ற உள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.  திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர். கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன்,  நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Read More
இன்டிவுட் திரைப்படவிழா! – டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை  ஐதராபாத்தில் நடக்கிறது!

இன்டிவுட் திரைப்படவிழா! – டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது!

உலக அளவில் சினிமாதுறை பெரியளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சினிமாதுறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்து செல்ல, இந்திய சினிமாதுறையை உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று, உலக முதலீட்டாளர்களை இந்தியசினிமாதுறைக்கு ஈர்க்கவும், புது டெக்னா லஜியை அறிமுகப்படுத்தவும், தியேட்டர் கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும் ஐதராபாத்தில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதலில் 5ம் தேதி வரை இன்டிவுட் திரைப்பட விழாபிரமாண்டமாக நடக்கிறது. இது குறித்து அந்த விழாவை நடத்தும் ஏரீஸ் குழும சி.இ.ஓவும், விழா தலைவருமான சோஹன் ராய் சென்னையில் அளித்த பேட்டியின் போது ‘‘நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து, யு.ஏ.இயில் பிஸினஸ் செய்துவருகிறேன். சினிமா மீது அபரீத காதல் கொண்டவன். சில படங்களை இயக்கி யிருக்கிறேன் கேரளத்தில் அதி நவீன தியேட்டர் நடத்துகிறேன். இப்போது சில படங்களை தயாரித்து, இயக்கி வருகிறேன். உலக அளவில் சினிமாதுறை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு சினிமா…
Read More
ராஜமெளலி-யின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டாச்சு!

ராஜமெளலி-யின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டாச்சு!

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமெளலின் அடுத்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. கடந்த வருடம் வசூலில் சாதனை படைத்த பாகுபலி 2 மற்றும் பாகுபலி1 ஆகிய படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவ்விரு படங்களும் எல்லா மொழிகளிலும் வெளிவந்து சூப்பர் ஸ்டார்களின் ரெக்கார்டுகளை தகர்த்து எறிந்த திரைப்படமாக அமைந்தது. இதுவரை ரூ 1,600 கோடிக்கு மேல் வசூலித்த 'பாகுபலி 2', சீனாவிலும் மாற்றம் செய்து 6,000 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நீண்ட காலமாக டிஸ்கஷனில் இருந்த ராஜமெளலி தன்னுடைய அடுத்த படத்தை இன்று பூஜையுடன் தொடங்கி விட்டார். இந்தப் படத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சுமார் 300 கோடி ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர் பெயர் ஆங்கில எழுத்தான ஆர் என ஆரம்பிப்பதால் படத்தின் பெயர் தற்போதைக்கு…
Read More
பிரபாஸ் நடிக்கும் புதிய படம் – மூன்று மொழிகளில் தயாராகிறது!

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் – மூன்று மொழிகளில் தயாராகிறது!

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர் பார்ப்பைக் கூட்டியுள்ள "சாஹூ" படத்தில் நடித்து வருகிறார்.  பிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹூ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.    கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி இன்று படமாக்கப்பட்டது.   ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.   விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல பிரபலமான சர்வதேச இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.    தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து…
Read More
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும்திகழ்பவர் என்.டி.ராமராவ்.தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. "என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா,  தந்தையின்  வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில்என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே  இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்துதயாரிக்கின்றனர்.
Read More
ஃபர்ஹானை தென்னிந்திய மொழியில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்!

ஃபர்ஹானை தென்னிந்திய மொழியில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்!

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார். ஆம்..பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார். இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஃபர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார். அதே போல் நானும் ‘ராக் ஆன் ’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன்.…
Read More
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா!

தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா!

சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின்…
Read More
ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.    படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என தில்லாக கூறுகிறார்…
Read More
என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்!  ஸ்ருதி பகீர்

என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்! ஸ்ருதி பகீர்

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர். அதிலும் திரையுலகில் பாலியல் ரீதியாகப் ஆண்கள் பாதிக்கப்படுவதும் கூட சர்ச்சையுடன் பேசப் பட்டது. அதே சமயம் இந்த . பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாமல் உடல்ரீதியாகவும் மனதளவிலும் மிகுந்த வலியைச் சுமந்துகொண்டு திரையில் தோற்றமளிக்கின்றனர் பலர். இந் நிலையில் தனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவம் ஒன்றை நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பகிர்ந்துகொண்டுள்ளார். நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹரிஹரன் மலையாள, கன்னடத் திரையுலகில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். இந்தியா டுடே குழுமம் சார்பில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ‘சௌத் இந்தியன் கான்க்லேவ் 2018’ நிகழ்ச்சியில் ‘செக்ஸிசம் இன் சினிமா –…
Read More
சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், கன்னட, மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘போடா போடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி களில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற…
Read More