18
Jan
தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா பாலிவுட் உலகில் எதிர்பார்ப்புமிக்க இந்தியளவிலான பன்மொழி திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் எனும் பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை தந்த கமர்ஷியல் வெற்றி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இத்திரைப்படத்தை இயக்குகிறார். Puri connects நிறுவனத்துடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். இன்று படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். இப்படத்திற்கு “LIGER” Saala Crossbreed எனும் அடி தலைப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நீண்ட தலை முடியுடன், மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரருடைய தோற்றத்தில் கையில் கிளவ்ஸுடன் நிற்கிறார். பின்னணியில் சிங்கமும், புலியும் கலந்து நிற்கிறது. லைகர் Liger என்பது…
