500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது ! நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது,…
Read More
ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !

தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். UV Creations தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க, Ed entertainment தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்ப்டத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. தமிழில் ரசிகர்களின் இதய நாயகியாக கோலோச்சியவர், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும்…
Read More
எப்படி இருக்கிறது RRR ?

எப்படி இருக்கிறது RRR ?

இயக்கம் - எஸ்.எஸ். ராஜமெளலி நடிகர்கள் - ராம்சரண், ஜூனியர் என்.டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ஆர்ஆர்ஆர். கோரோனா போராட்டங்களை தாண்டி பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் கண்டிப்பாக திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் கூச்சலிடுகிறார்கள் ஆனால் படமாக திரைக்கதையாக படம் அசத்துகிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 1920களில் சுதந்திரப் போராட்டகாலத்தில், வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை வைத்து கற்பனையாக ஒரு கதையினை உருவாக்கியிருக்கிறார் ராஜமெளலி. காட்டுக்குள் இருந்து கடத்தப்பட்ட தங்கை மல்லியைத் தேடும் பீம், அவரை பிடிக்க நியமிக்கப்படும் ராம ராஜூ. இருவரும் ஒன்றிணைந்து திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் தான் RRR. பீமா ஜீனியர் என் டி ஆர், படிக்காத தற்குறி, அடங்கிபோகும் நீரின் பிரதிபலிப்பு ஆனால் பொங்கும்போது மிரட்டுகிறார். பல இடங்களில்…
Read More
அதிக விலைக்கு போன இந்தி டப்பிங்க் இந்த இயக்குநரின் படமா ?

அதிக விலைக்கு போன இந்தி டப்பிங்க் இந்த இயக்குநரின் படமா ?

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும் இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது. தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக…
Read More
விவாகரத்து செய்யும் அடுத்த நட்சத்திர தம்பதி மீண்டும் கிளம்பும் பூதம் !

விவாகரத்து செய்யும் அடுத்த நட்சத்திர தம்பதி மீண்டும் கிளம்பும் பூதம் !

  நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக வெளியான செய்திலிருந்தே ரசிகர்கள் இன்னும் முழுமையாகமீளாத நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரைப் பிரியவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் பெயரை நீக்கியிருக்கிறார். இதுதான் விவகாரத்து சர்ச்சைக்கு காரணம். சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கணவர் பெயரை இணைத்துஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். தற்போது கணவர் பெயரை நீக்கிபழையபடி தனது குடும்பப்…
Read More
இயக்குநர் லிங்க்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம் வாரியர் !

இயக்குநர் லிங்க்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம் வாரியர் !

  'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு … 'RAPO-19' என்ற டைட்டிலோடு ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை. இது. ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'மிருகம்' ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார். ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 'தி வாரியர்' என்று படத்துக்கு டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகமாக இருக்கிறது படக்குழு. 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்' பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார்…
Read More
கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

சமீபத்த்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்த ‘ஏ சாமி’ பாடல் கேரள கோவிலில் நாதஸ்வர கலைஞர்களாக வாசிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையே திரும்பி பார்க்கும், பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது. கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகளில் கூட்டத்தை வரவைத்ததோடு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் இந்தியா முழுதும் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மிக முக்கியமாக இருந்தது குறிப்பிடதக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆனது குறிப்பிடதக்கது.…
Read More
இந்திய அளவில் சாதனைகள் படைத்து வரும்  LIGER ( saala Crossbreed )

இந்திய அளவில் சாதனைகள் படைத்து வரும் LIGER ( saala Crossbreed )

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed )இந்திய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது ! விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட LIGER (Saala Crossbreed) படத்தின் காட்சித்துணுக்கு  (glimpse)  புத்தாண்டு பரிசாக  வெளியாகியுள்ளது. ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் அளவிலான  அட்ரினலின் பம்ப் செய்யும் MMA  சண்டைக் காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வையை இந்த வீடியோ வழங்கியுள்ளது, ‘மும்பை தெருக்களின் சேரி நாயகன்... சாய் வாலா... லைகர்..."  அறிமுகத்தை வெளிப் படுத்துவதாக இந்த காட்சித்துணுக்கு அமைந்துள்ளது. தனது ஹீரோக்களை ஸ்டைலான அட்டகாசமான அவதாரங்களில் வழங்குவதில் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன் நாத், இந்த மிகப்பிரமாண்டமான இந்திய பன்மொழி திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஸ்டைலான மற்றும் அதிரடி அவதாரத்த்தில் காட்டியுள்ளார். விஜய் ஒரு மிருகம் போல் கூர்மையான உடலமைப்புடன்,  முற்றிலும்…
Read More
விரைவில் நடிகர்  அவதாரம் எடுக்கும் – தேவி ஸ்ரீ பிரசாத் !

விரைவில் நடிகர் அவதாரம் எடுக்கும் – தேவி ஸ்ரீ பிரசாத் !

'புஷ்பா - தி ரைஸ்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலராலும் வெகுவாக பாராட்டப்படுவது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாதை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது . முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கிய இப்படம் சமீபத்தில் பல மொழிகளில் வெளியானது. இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரத்யேக நேர்காணலில் மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத், படத்தின் இசை மற்றும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசினார். நேர்காணலின் முக்கிய அம்சங்கள் உங்களுக்காக: ஐந்து மொழிகளிலும் புஷ்பாவின் பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்? உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. குறிப்பிட்ட மொழிக்கு ஏற்ற பாடகர்களை கவனமாக தேர்வு செய்தேன்.…
Read More
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

    Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளிலுருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள்…
Read More