தெலுங்கு நடிகர் நிகிலின் 20வது படத்திற்கு கம்பீரமான தலைப்பு

தெலுங்கு நடிகர் நிகிலின் 20வது படத்திற்கு கம்பீரமான தலைப்பு

நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் #Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு, அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது நடிகர் நிகிலின் 20வது படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து, நிகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். #Nikhil20 படத்திற்கு கம்பீரமாக 'சுயம்பு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்தது‘ அல்லது 'தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது' என அர்த்தம். முதல் பார்வை போஸ்டரில் நிகில் போர்க்களத்தில் ஒரு மூர்க்கமான வீரராக உள்ளார். ஒரு வழக்கமான போர் வீரனைப் போல நீண்ட கூந்தலைக் கொண்டு, ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடனும் உள்ளார். இந்தப் படத்திற்காக அவரது தோற்றம் குறிப்பிடத்தகுந்ததாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளர்கள்…
Read More
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் இன் முதல் படத்தை வெளியிட உள்ளது

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் இன் முதல் படத்தை வெளியிட உள்ளது

  குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக்…
Read More
நடிகர் ரவிதேஜா வின் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் ரவிதேஜா வின் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா வின் பான் இந்திய பிரமாண்ட படைப்பான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது மாஸ் மஹாராஜா ரவி தேஜா,வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தி காஷ்மீர்ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இன் பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படம் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது .தி காஷ்மீ. இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது. படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு வீடியோவை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ராஜமுந்திரியில் உள்ள சின்னமான ஹேவ்லாக் பாலம் (கோதாவரி) எனும் இடத்தில் பிரம்மாண்டமாக பர்ஸ்ட் லுக் வெளியீட்டு…
Read More
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமாக “சைந்தவ்” படம் அமைந்துள்ளது

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமாக “சைந்தவ்” படம் அமைந்துள்ளது

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான "சைந்தவ்" படத்தில் விகாஸ் மாலிக்காக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!! தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான "சைந்தவ்" படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் பன்முக திறமையாளர், முன்னணி நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் படத்திலிருந்து அவரது கேரக்டர் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நவாசுதீன் சித்திக் விகாஸ் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கேரக்டர் போஸ்டரில்,…
Read More
நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார்.இவர் நடிகை சமந்தாவை 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 -ம் விவாகரத்து பெற்றனர். தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, " சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்க வேண்டும்". "சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எங்களை குறித்து வெளியாகும் வதந்திகள் எங்களிடையே உள்ள நல்லுறவை பாதிக்கிறது" என்று கூறியுள்ளார்.
Read More
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

  நந்தமுரி பாலகிருஷ்ணா- கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. மாஸ் ஹீரோவான நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கிறார்கள்.…
Read More
சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
Read More
ஜீனியர் NTR படத்துக்கு அனிருத் இசை

ஜீனியர் NTR படத்துக்கு அனிருத் இசை

ஆச்சார்யா படத்தை இயக்கிய டோலிவுட்டின் பிரபல இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் தான் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக போகிறது. இந்த படத்திற்கு கோலிவுட்டின் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். அவரது பின்னணி இசையில் உருவாகி உள்ள மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே, ஆலியாபட் என முன்னனி நடிகைகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ஜீனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார், ஸ்ரீகர் பிரசாத் படதொகுப்பு, சாபு சிரில் என பலமான தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.
Read More
டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

  படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’படத்துக்கு ரூ.7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் 70 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ரூ 7 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.. 70 களீல் மிகவும் அறியப்பட்ட, ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கைச் சித்திரமே இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மகாநதி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களுக்கு…
Read More
கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

இயக்கம் - பிரசாந்த் நீல் நடிகர்கள் - யாஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், இந்தியாவின் கோலார் வயல் சுரங்கத்தின் பின்ணனியில் இதுவரை இந்தியா பார்த்திராத மாஸ் ஹீரோ படத்தைதந்திருக்கிறார் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன் கருடனை கொன்று கேஜிஎஃப்பை  கைப்பற்றிய ராக்கி அதன் பிறகுகேஜிஎஃப்பை எப்டி கொண்டு சென்றான் ,  அதை கைப்பற்ற நினைத்த மற்ற நபர்களுக்கும் மற்றும் ராக்கியின்செயல்பாட்டால் அரசாங்கம் என்ன செய்தது  அவர்களை ஜெயித்தானா என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தின் முதல் பாகத்தை இந்தியாவே கொண்டாடியது காரணம் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமேபார்த்த மேக்கிங் இதில் வசப்பட்டிருந்தது அதில் ஒரு ஹீரோவுக்கான மாஸ் அழகாக பொருந்தியிருந்தது. மீண்டும் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அசாத்தியம் அதைசாத்தியபடுத்தி அசரவைத்திருக்கின்றனர். ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி ரசிகனுக்கு தர வேண்டும், செண்டிமெண்டைகதையில் கலக்க வேண்டும் என…
Read More