பிரபாஸிற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்

பிரபாஸிற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்

இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும். படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முப்பரிமாண காணொளியாக இன்று வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒரு முன்மாதிரி முயற்சியாக அமைந்துள்ளது. உள்ளார்ந்த அர்த்தங்களை கொண்டுள்ள இந்த பாடல் இரண்டு முக்கிய பரிமாணங்களை கொண்டுள்ளது. காணொளியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னொன்று…
Read More
ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ !

ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ !

ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார். இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். மாஸான இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். படத்தை…
Read More
வெளியானது ராதே ஷியாம் டீசர்!

வெளியானது ராதே ஷியாம் டீசர்!

*யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் டீசர் ரிலீஸ்: வெளியானது விக்ரம் ஆதித்யா ரகசியங்கள்* நடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று, அவரது அடுத்த படமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்துள்ளது. ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை இதுவரை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ள டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. விடுகதை பாணியில் அமைந்துள்ள இந்த டீசர், பிரபாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரமான கைரேகை நிபுணர் குறித்த ரகசியங்களை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பான முறையில் வெளியிடுகிறது. முதல் முறையாக இத்தகைய வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பிரத்யேகமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.…
Read More
விரைவில்   வெளியாகவிருக்கும் நானியின் அடுத்த படம்!

விரைவில் வெளியாகவிருக்கும் நானியின் அடுத்த படம்!

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளார். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுவாகும். சமீபத்தில், இப்படத்தில் நானியின் இரண்டாவது பரிமாணமான வாசுவின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. பெங்காலி பாய் என்ற முதல் பரிமாணத்தைப் போலவே, இதுவும் எல்லா இடங்களில் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான நானியின் இரண்டு தோற்றங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன. இந்தப்…
Read More
பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

  டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் உடைய பிரமாண்ட தயாரிப்பில், நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். ‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா
Read More
வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR”  படக்குழு

வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR” படக்குழு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.   இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.   உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்.
Read More
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )படத்தில் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.   அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார். ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம்…
Read More
விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு ! தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள, படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது. படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை…
Read More
துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்”  முதல் பார்வை

துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்” முதல் பார்வை

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும். முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர்…
Read More
நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி!

நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது. 'புரியாத புதிர்', 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள்…
Read More