தமிழில் வருகிறார் ‘ புதிய புரூஸ்லீ..’!

தமிழில் வருகிறார் ‘ புதிய புரூஸ்லீ..’!

மொத்தமே ஜஸ்ட் ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலக அளவில் புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார். அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக உருவாகியிருக்கும் படம் புதிய புரூஸ்லீ.ஏ.சோணை என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் புரூஸ்லீ மாதிரியான தோற்றத்தில் உள்ள புரூஸ் சான், நாயகனாக நடித்திருக்கிறார். வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவசங்கர், இசை செளந்தர்யன், நடன இயக்கம் ராபர்ட், மனோஜ், படத் தொகுப்பு தங்கவேல். இப்படம் பற்றி இயக்குநர் கூறியதாவது…. நான் ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகன். எனக்கு அந்தக் கேரக்டரை மனதில் வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை. நாயகன்…
Read More
மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பைச் சொல்லும் படம்!

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பைச் சொல்லும் படம்!

M10 PRODUCTIONS" சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் "யா யா". இப்படத்தில் "மிர்ச்சி" சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ். M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது. மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார். அதாவது வானம், பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், கடல், மலை போன்றவைகளை எப்படி இறைவன் படைத்தானோ அதே அளவுக்கு ஒட்டகத்தையும் அவன் ஒப்பற்ற அதிசயமாகவே படைத்திருக்கின்றான் என்றால், அது மிகையல்ல. பரம சாதுவாகக் காட்சி அளிக்கும் ஒட்டகங்கள், சாதாரணமாக மணிக்கு…
Read More
வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து இதே ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலை, மூணார் ஆகிய காடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை…
Read More
‘டிராஃபிக் ராமசாமி’ பட ஆடியோ உரிமையை  டிரெண்ட்  மியூசிக்  கைப்பற்றியது!

‘டிராஃபிக் ராமசாமி’ பட ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது!

தமிழகத்தில் ரியல் இந்தியன் தாத்தாவும் சமூக போராளியுமான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவ்கி’ இசையமைப்பாளர் பால முரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ் , ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி , மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார்.…
Read More
கடமான் பாறை படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா

கடமான் பாறை படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா

நடிகர் மன்சூரலிகான்  தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் ‘கடமான் பாறை’. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனு ராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு   –  மகேஷ்.T, இசை  – ரவிவர்மா, பாடல்கள்  –  விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை  –  ஜெயகுமார், நடனம் –  டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா,. சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர், ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார், ஆக்கம், இயக்கம்  – மன்சூரலிகான். இந்த படத்தில் மன்சூரலிகானின் ஜோடியாக…
Read More
சஸ்பென்ஸ் திரில்லரா உருவாகி இருக்கும் ‘காளிதாஸ்’!

சஸ்பென்ஸ் திரில்லரா உருவாகி இருக்கும் ‘காளிதாஸ்’!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக் கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின்…
Read More
தனஞ்செயன் தமிழ் சினிமாவின் பிக் பாஸ்! -மிஸ்டர் சந்திரமெளலி ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆர்யா!

தனஞ்செயன் தமிழ் சினிமாவின் பிக் பாஸ்! -மிஸ்டர் சந்திரமெளலி ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆர்யா!

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர். விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார் தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்த கதையை எடுக்க முடியும் என்றேன். கார்த்திக் சாரை அணுக உதவியாக இருந்த இயக்குனர் கண்ணன் சாருக்கு…
Read More
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ‘காட்டேரி’ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ‘காட்டேரி’ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

ஹாஸ்யமும்ம் த்ரில்லரும் மிக்ஸ் ஆன ஒரு கதையை லாஜிக் இல்லாமல் மேஜிக்காகக் காட்டியிருந்த படமான ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் தீகே இயக்கவிருக்கும் ‘காட்டேரி’ திரைபப்டத்தில் 4 முன்னணி ஹீரோயின்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். வைபப் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் ஹன்சிகா, ஓவியா போன்ற நடிகைகள் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 4 ஹீரோயின்ஸ் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, மனலி ரத்தோட் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து சோனம் பாஜ்வா, "படத்தில் நடிக்கும் மூன்று நாயகிகளுக்கும் சமமான கேரக்டர். யாரும் முதல் ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்று இல்லை. ஜூன் மாதம் எனது காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டிலும் நடைபெறவுள்ளது" என்று கூறியுள்ளார். இப்படத்தில் பீரியட் போஷன் ஒன்றும், மாடர்ன் போஷன் ஒன்றும் இடம்பெறவிருப்பதாகவும், 4 ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் இயக்குநர் தீகே தெரிவித்துள்ளார். கோலிவுட்…
Read More
கரு என்ற டைட்டிலில் தயாரான சாய்பல்லவி படம் “தியா” என்ற பெயரில் 29ம்தேதி ரிலீஸ்!

கரு என்ற டைட்டிலில் தயாரான சாய்பல்லவி படம் “தியா” என்ற பெயரில் 29ம்தேதி ரிலீஸ்!

வனமகன்’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.’ தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா’ என்று மாறியிருக்கிறது. மலையாளத்தில் வெளியான `பிரேமம்’ படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆனவர் நடிகை சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் பெயர் `கரு’ எனக்கு சொந்தமானது என்று ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பெயர் `கரு’வை 2013-ம் ஆண்டே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்தப் பெயரை கொண்ட படத்தைத் தயாரித்து வருகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது ‘கரு’ என்ற பெயரை ‘தியா’ என மாற்றியிருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பெயர்…
Read More
முழுக்க  புதியவர்கள் கூட்டணியில் தயாராகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முழுக்க புதியவர்கள் கூட்டணியில் தயாராகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்கிற படம் உருவாகி வருகிறது.  இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும் படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ‘ ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி  வி.சி. தயாரிக்கிறார் .”ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்  ‘என்று   டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர்…
Read More