ஸ்வாதி கொலைவழக்கு டைட்டிலை ஏன் நுங்கம்பாக்கம்-னு மாத்தினீங்க? விஷால்

ஸ்வாதி கொலைவழக்கு டைட்டிலை ஏன் நுங்கம்பாக்கம்-னு மாத்தினீங்க? விஷால்

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் " நுங்கம்பாக்கம் ".நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன். இந்த நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள்.. ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.…
Read More
படு திரில்லர் படம் – ’கண்மணி பாப்பா’

படு திரில்லர் படம் – ’கண்மணி பாப்பா’

வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா”. நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல்…
Read More
பேய் பசி படத்துக்காக ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார் யுவன்!

பேய் பசி படத்துக்காக ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார் யுவன்!

பொதுவான் பழமொழிதான் என்றாலும்  தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் "பியார் பிரேமா காதல்" படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது…
Read More
சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்குடைய ‘ பாண்டி முனி’

சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்குடைய ‘ பாண்டி முனி’

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திரு விளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.     இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி  வேடத்தில் நடிக்க,   புதுமுக நடிகையான மேகாலி  பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                    …
Read More
நாடோடிகள் –  2 படத்தின் படப்பிடிப்பு : மதுரயில் பிரமாண்டமாக நடக்கிறது!

நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு : மதுரயில் பிரமாண்டமாக நடக்கிறது!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப் பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்   "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது.   இதில்   சசி குமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நா ராயணன்,  ஞானசம்பந்தம்,  துளசி,  ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். இதை எழுதி இயக்குகிறார்  - சமுத்திரகனி. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி…
Read More
அங்காடிதெரு மகேஷ் – ஷாலு  நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “!

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “!

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது … இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி,…
Read More
பூர்ணா நடிக்கும் குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்!

பூர்ணா நடிக்கும் குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்!

அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன்,  சா.பா.கார்த்திராம் இணைந்து  தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “ . இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -        கர்ணா இசை           -        யஜமன்யா எடிட்டிங்     -        SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள்    -        வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு      -       மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம்           -       பண்ணா ராயல் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு  -  A.R.K.ராஜராஜா தயாரிப்பு  -  மே.கோ.உலகேசுகுமார் இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்.
Read More
“ யாளி “  படத்தின் மூலம் இயக்குனராகும்  பிரபல நடிகை “ அக்ஷயா”

“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா”

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “..  இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  அக்ஷயா.B .. இவர் ஆரியா நடித்த கலாபக்காதலன், விஜயகாந்த் நடித்த  “ எங்கள் ஆசான், டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது.. பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நாம் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                     முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை…
Read More
டிராஃபிக் ராமசாமி படத்தில் ஏன் நடித்தேன்? – எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!

டிராஃபிக் ராமசாமி படத்தில் ஏன் நடித்தேன்? – எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!

தமிழ் நாட்டில் அநாயவசியமாக ஒட்டப்படும் போஸ்டர்களையும், பேனர்களையும் கிழித்தே பிரபலமான ஒரிஜினல் இந்தியத் தாத்தாவும், சமூகப் போராளியுமான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகி யிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி' . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி இப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இயக்குநரும், கதையின் நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது, “" இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் . ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட…
Read More
யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்க்கும் ‘செயல்’

யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்க்கும் ‘செயல்’

ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே... ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.. அவரிடம் பேசிய போது....."எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக  வெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார். எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது.விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே... இந்த படத்தில்…
Read More