கரு என்ற டைட்டிலில் தயாரான சாய்பல்லவி படம் “தியா” என்ற பெயரில் 29ம்தேதி ரிலீஸ்!

வனமகன்’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.’ தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா’ என்று மாறியிருக்கிறது.

மலையாளத்தில் வெளியான `பிரேமம்’ படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆனவர் நடிகை சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் பெயர் `கரு’ எனக்கு சொந்தமானது என்று ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பெயர் `கரு’வை 2013-ம் ஆண்டே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்தப் பெயரை கொண்ட படத்தைத் தயாரித்து வருகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ‘கரு’ என்ற பெயரை ‘தியா’ என மாற்றியிருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பெயர் படத்தில் வரும் முக்கியமான கேரக்டர் பெயராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம் சி.எஸ், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த தியா’ திரைப்படம் வரும் ஏப்ரல்.27-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித் துள்ளது. மலையாளம், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹிட் நாயகியான சாய் பல்லவியின் ‘தியா’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.