தன் கையே தனக்கு உதவி  என்ற மெசேஜூடன் மே4ல் ரிலீஸாகுது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’

தன் கையே தனக்கு உதவி  என்ற மெசேஜூடன் மே4ல் ரிலீஸாகுது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’

மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுது போக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கை யாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,‘ இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சியில் நடித்தது புது அனுபவமாக…
Read More
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வழி பாருங்க.. இல்லேன்னா…! – -ஞானவேல்ராஜா எச்சரிக்கை!

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வழி பாருங்க.. இல்லேன்னா…! – -ஞானவேல்ராஜா எச்சரிக்கை!

நம்ம சிங்காரச் சென்னையில் பிறந்த அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா.. என் வீடு இந்தியா’. தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக் கிறது. நாட்டுப் பற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் துடிப்பு மிக்க இளம் ராணுவவீரர் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய வக்கந்தம் வம்சி இயக்கு கிறார். இது இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படமாகும். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். சரத்குமார் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், நதியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஸ்ரீதர், ஞானவேல் ராஜா, இப்படத்தை தமிழில் விநியோகிக்கும்…
Read More
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

கோலிவுட்டின் அழகு வில்லன் அலைஸ் நாயகன் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும்…
Read More
ரீ-ரிலீசிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’.  

ரீ-ரிலீசிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’.  

’மக்கள் திலகம்’, ‘பொன்மனச் செம்மல்’, ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர் நடிப்பில் 1958-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘நாடோடி மன்னன்’. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர்.தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.  இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி,  சரோஜா தேவி  மற்றும்  எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.  அப்போதைய  காலகட்டத்திற்கு மிகப் பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன்  இணைந்து ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்’ சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர். தன்னிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று இந்தப் படத்தைத் தயாரித்து வந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையேல் நாடோடி என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர். ஆனால் இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது…
Read More
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்!

மத்திய அரசால் சினிமாப் படங்களுக்கு வழங்கப்படும்    65-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை தில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக 'டு லெட் ' தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்பட பின்னணி இசை, பாடல் இசைமைப்புக்கான இரு விருதுகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது க்கு கே.ஜே. ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதுக்கு மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கன்னாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் தேர்வாகியுள்ளனர். இந்த முறை தமிழப் திரைப்படத் துறைக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் தலைமையில் தேசிய திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஆராதனா பிரதான், உஷா கிரன் கான், அனந்த் விஜய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, 2017-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை…
Read More
“பியார் பிரேமா காதல்” படம் ஹாலிவுட்டுக்கு(ம்) போகுது!

“பியார் பிரேமா காதல்” படம் ஹாலிவுட்டுக்கு(ம்) போகுது!

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். அந்த வகையில் "பியார் பிரேமா காதல்" என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.  பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி  உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. ' காதலுக்கு மொழி அவசியமில்லை.  காதலை பற்றிய படங்களுக்கும்  மொழி அவசியமில்லை. " High on Love" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே…
Read More
உறுமீன் புகழ் சக்திவேல் இயக்கத்தில் ஒரு நாயின் அட்வென்சர் படம்.!

உறுமீன் புகழ் சக்திவேல் இயக்கத்தில் ஒரு நாயின் அட்வென்சர் படம்.!

இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. படங்களில் விலங்குகளை வைத்தும் தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன.இந்நிலையில் தற்போது அப்படியாக ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தை உறுமீன் பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பும் படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது  இன்று நகரத்தில் அதுவும் பிளாட் சிஸ்டத்திலும் வாழும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள்…
Read More
கோலிவுட்-டில் நோ ஷூட்டிங் & போஸ்ட் புரொடக்‌ஷன்! – ஆனா மல்டிபிள் தியேட்டர்கள் ஓடுது!

கோலிவுட்-டில் நோ ஷூட்டிங் & போஸ்ட் புரொடக்‌ஷன்! – ஆனா மல்டிபிள் தியேட்டர்கள் ஓடுது!

திரைத் துறைக்கு க்யூப், யுஎப்ஓ எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டண குறைப்பை வலியுறுத்தி கடந்த 3 வாரங்களாக தயாரிப்பாளர் சங்கம் புதுப்பட வெளியீடுகளை வைத்தது ,இதனால் எப்போதும் களைகட்டும் வெள்ளிக்கிழமை புதுப்பட ரிலீஸ் ஆர்பரிப்புகள் இந்தவாரமும் இல்லை. டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடையேயான பேச்சுவார்த்தை சமரசத்தை எட்டாதததை அடுத்து இந்த வாரம் புதிய படங்களின் ரிலீசுக்கு மட்டுமல்ல, தியேட்டர்கள், ஷூட்டிங்குகள், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்துக்கும் சேர்த்தே ஸ்ட்ரைக் அறிவித்துள்ளன .அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்…
Read More
100 படங்களில் நடித்த நடிகர் ; இன்று வீதி வீதியாக தர்பூசணி விற்கும் அவலம்!

100 படங்களில் நடித்த நடிகர் ; இன்று வீதி வீதியாக தர்பூசணி விற்கும் அவலம்!

சிவா என்பவர் சுமார் 100 படங்களில் முகம் தெரிந்து, தெரியாமலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இவர் சினிமா ஆசையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையிலிருந்து கோடம்பாக்கம் வந்தார். சமுத்திர கனியுடன் ஒரு படம், இமான் அண்ணாச்சியுடன் சில படங்கள், அருள், திருப்பாச்சி, பகவதி மற்றும் தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்களுக்கு உதவியாளராக குடைபிடிப்பது, கண்ணாடி காட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார், அதற்கு ஒரு நாளைக்கு ரூ.550 தருவார்களாம். இது போன்ற வேலைகள் தினமும் இருக்காததால், தர்பூசணி பழங்களை வாங்கி, சாலிகிராமம் பகுதி முழுக்க தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறார்.தாய், தந்தையை இழந்த இவருக்கு 35 வயது, இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடன் பிறந்த தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறாராம்.
Read More
‘மனுசனா நீ’ படத்தை நெட்டில் வலையேற்றிட்டாங்க! – இயக்குநர் அப்செட்!

‘மனுசனா நீ’ படத்தை நெட்டில் வலையேற்றிட்டாங்க! – இயக்குநர் அப்செட்!

கஸாலி இயக்கத்தில் ஹெச்-3 சினிமாஸ் தயாரிப்பில் கடந்த  வெளியாகியுள்ள 'மனுசனா நீ' திரைப்படம் டாக்டர்களை கேவலமாக சித்தரித்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்  தன் படத்தை திருட்டு தனமாகச் சுட்டு நெட்டில் போட்டு விட்டார்கள் என்று ஆவேசப்படுகிறார்.. இது குறித்து கஸாலி வெளியிட்ட ஒரு ஸ்டேட்மெண்டில், “  எனது படம் 'மனுசனா நீ' கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  என் படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர். ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.…
Read More