தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

வுத்திலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, நார்த்திலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் கோலிவுட் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் – ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி அப்படீன்னு தமிழ் தெரிஞ்ச, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதுதான் உண்மை. தமிழில் மட்டுமே 250 பாடல்களைப் பாடி முடிச்சுப்புட்டார்.

அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise) கம் ஆன் எவ்ரிபடி சிங் வித் மி (come on everybody sing with me) என அந்த குரல் ஒலித்ததும், ரசிகர்களின் ஆரவாரம் விண்னை பிளக்கும் ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களாலும் கொண்டாடப்படும் மெல்லிசை ராணி ஸ்ரேயா கோஷலுக்கு நிகர் எவருமில்லை.

1984-ல் வெஸ்ட் பெங்க்காலில் பிறந்து, ராஜஸ்தானிலும் மும்பையிலும் வளர்ந்தவர் ஸ்‌ரேயா கோசல். ஜஸ்ட் நான்கு வயசில் இசை கற்கத் தொடங்கி, பதினான்கு வயதில் முதல் தனி ஆல்பம் வெளியிட்டார். பதினாறாம் வயதில் ‘ஜீ’ தொலைக்காட்சியின் ‘ச ரி க ம’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார். பாலிவ்ட் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலியுடைய அம்மா அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஸ்ரேயாவைப் பரிந்துரைக்க, இவருக்கு பன்சாலியின் ‘தேவதாஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னணிக் குரலாக முதல் பாடல் வாய்ப்பு கிடைத்தது.

ஹை ஸ்கூலில் படிச்சுக்கிட்டிருந்த ஸ்ரேயா, ஸ்குக்கு லீவு போட்டுப்புட்டு பாடல் பதிவுக்கு வந்தார். ‘தேவதாஸ்’ படத்தில் ஒன்றல்ல; ஐந்து பாடல்களைப் பாடினார். இவர் பாடிய ஐந்து பாடல்களுமே இவரை நட்சத்திரப் பாடகியாக்கியது என்றால், அவற்றில் ‘பைரி பியா’ பாடலுக்கு அந்தச் சிறிய வயதில் நேஷனல் அவார்டேஎ இவரைத் தேடி வந்துச்சு. இவரின் தமிழ் உச்சரிப்பு தாளாத ஆச்சர்யம் என்றால் அதே ஆச்சரியம்… இந்தி ரசிகர்களுக்கும். இந்தியும் இவர் பின்னாளில் கற்றுக்கொண்ட ஒரு மொழியாக்கும்!

நம்மால் இன்றைக்கும் மறக்க முடியாத கவிஞர்களில் ஒருவரான நா.முத்துக்குமார், ’உன் பேரைச் சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’ எனும் முத்துமுத்தான வார்த்தைகளைத் தன் முத்திரைபதித்த எழுத்தின் மூலம், ’அங்காடித் தெரு’வில் அழகாய் கோர்த்திருப்பார். அது, எல்லோருக்கும் அமைதில்லை; எழுதுவதற்கும் சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி இடம்பிடிச்ச அந்த வரிகள் கவிஞரை மட்டுமல்ல, அதைப் பாடிய பெண் குரலின் பேரையும் சொல்லவைச்சத்தான் அதிசயம். மண்ணுக்குள் வைரம் இருந்தால் மதிப்பு இருக்காது. அது, வெளியில் வரும்போதுதான் உலகமே பிரமிக்கிறது. அப்படியான அந்தக் குரல், இசை உலகின் விலாசத்தை வெளியில் காட்டிய பிறகுதான்… இளசுகள் முதல் பெரிசுகள் வரை அவருடைய பாடல்களைத் தேடித்தேடி, தன் ஃபேவரைட் பட்டியலில் சேமிக்கத் தொடங்கினர். இன்றும் அவர்களை அதே வலைக்குள், கட்டிப் போட்டிருப்பதுதான் பேரதிசயம்.

ஸ்ரேயா என்னும் குரல் இளவரசி ‘பிதாமக’னில் ‘இளங்காத்து வீசுதே’வில் கொஞ்சமும் ‘விருமாண்டி’யில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பாடிய ‘ஒன்னவிட’, ‘7ஜி ரெயின்போ காலனி’யில் ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்’ என வளர்ந்துவந்தார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘தாஸ்’ படத்தில் ‘சாமிகிட்ட’, ‘சண்ட கோழி’யில் ‘தாவணி போட்ட தீபாவளி’யிலும் பயணத்தைத் தொடர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடக்கத்தில் சில பாடல்கள் பாடியிருந்தாலும் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா..’ இவர் இன்னும் இன்னும் முன்பே வந்து தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திச்சு. (கட்டிங் கண்ணையா)

மேலும், ‘ஒரு வெட்கம் வருதே’ என ‘பசங்க’ படத்தில் பாடியது மட்டுமல்லாது, உண்மையான பசங்களுக்கும் வெட்கத்தை வரவைச்சார். அவிய்ங்களை அதோடு நிறுத்திபுடாம, ‘சில்லுனு ஒரு காதல்’ மூலம் ‘முன்பே வா என் அன்பே வா’ என அன்பாய் அழைத்து காதல் குளிரூட்டினார். தொடர்ந்து, ‘அய்யய்யோ’ எனப் ‘பருத்திவீரன்’ படம் மூலம் பல இளைஞர்களையும் புலம்பவைத்த வேளையில், ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில், ‘மன்னிப்பாயா’ எனக் கேட்டு, அவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் இடம்பிடிச்சார்.’பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’ என வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ஸில் பலரையும் சொல்ல வைத்தவர், அதற்குப் பின்பு அவரது பாடல்களை மட்டுமே ரசிகர்கள் எண்ணிச் சொல்லும் அளவுக்கு முன்னேறினார். அது மட்டுமல்ல, ‘கள்வரே’ என ’ராவண’னிலும், ‘காதல் அணுக்கள்’ என ’எந்திர’னிலும், ’றெக்கை முளைத்தேன்’ என ‘சுந்தர பாண்டி’யிலும் ரசிகர்களைச் சுற்றிச்சுற்றி வலம்வர வைத்தார்.

தொடர்ந்து, அன்பே.. பேரன்பே (என்.ஜி.கே.), சாரகாற்றே (அண்ணாத்தே), கண்டாங்கி (ஜில்லா), வானே.. வானே (விஸ்வாசம்) எனத் தமிழ்த் திரையுலகில் வலம்வரும் இசையமைப்பாளர்களின் (இளையராஜா, மணிசர்மா, கார்த்திக்ராஜா, கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், தேவா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சுந்தர்.சி பாபு, ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, தீனா, ஜோஸ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீபிரசாத், சித்தார்த் விபின், சாம் சிஎஸ். ஜஸ்டின் பிரபாகரன்) இசைத் தேர்களை எல்லாம் நித்தம்நித்தம் வடம்பிடித்து இழுத்த ஸ்ரேயா கோஷல், ‘ஐ’ படத்தில், ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்றார், அவருடைய குரலுக்கு என்றும் ஓய்வு கொடுக்காமல்.

இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தவிர ஒoயா, மராத்தி, போஜ்புரி தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அங்கிகா மொழி, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகளில் சுமார் 5,000 பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு வயது இன்னிக்கு 41. தனிப்பட்ட வாழ்வில், 2015-ல் தன் இளவயது நண்பரான ஷைலாதித்யாவை மேரேஜ் ச்ஞ்சசுக்கிட்டார். இது வரையிலும் நான்கு தேசிய விருதுகள் (அதிக முறை கணக்கில் பாடகி சித்ரா ஆறு முறை வென்றுள்ளார்), ஆறு மாநில விருதுகள் ஆகியவற்றுடன் 160 ஊடக நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். இப்படியான விருதுகளுக்கு வெளியே அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ‘ஸ்ரேயா கோஷல்’ நாள், லண்டனில் நாடாளுமன்ற விருது, மூன்று முறை ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் புகழ் பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றது மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மெழுகுச்சிலைக் காட்சியகத்தின் டெல்லி கிளையில் ஸ்ரேயாவுக்குச் சிலை அமைந்ததும் தனித்த கௌரவம்.

அந்த வகையில் மொழி இல்லாத இசையே காதல் கொள்ளும் ஸ்‌ரேயா கோஷல் பிறந்த நாளில் சினிமா பிரஸ் கிளப் சார்பில் எண்ணற்ற ஆண்டுகள் கடந்தாலும் பழுதாகாத, கரைந்துபோகாத இதே குரல் வளத்துடன் வாழ்க வளமுடன் / நலமுடன் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.