இசை இளவரசன் ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

மியூசிக் டைரக்டர், சிங்கர், ஆக்டர், புரொடியூஸர் மற்றும் பின்னணிப் பாடகர். கூடவே “இசை இளவரசன்” என்றும் அழைக்கப்படுற ஜிவி பிரகாஷ் பர்த் டேயாக்கும் இன்னிக்கு!

வசந்தபாலன் டைரக்ட் பண்ணிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போஓ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படமாக்கும்.

கோலிவுட் மட்டுமில்லாம டோலிவுட், சாண்டல் வுட் அப்படீன்னு தென்னிந்திய திரையுலகில், அதிகம் தேடப்படும் இசையமைப்பாளராக மாறிப்புட்டர், ஜி.வி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு அப்படீன்னு படு பிசியான கலைஞராக வலம் வாறார், ஜி.வி.

ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களும் சினிமாவிற்குள் நுழைவது போல, சத்தமே இல்லாமல் நுழைந்த இவர், இப்போது இயல்பான இசையிலேயே புதுமையை புகுத்தி இளசுகளின் மனங்களில் பச்செக்குன்னு பர்மெணண்டான ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார்.. .

இளையராஜா சாரோட ‘அன்னக்கிளி’, ரஹ்மான் சார்ப்ட ‘ரோஜா’ போலத்தான் ‘வெயில்’ திரைப்படமும் தமிழ் சினிமாவுக்கும் இசையுலகுக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமைஞ்சுது. “பானை சோற்றின் பதமறிய பருக்கை போதும்” என்பதை போல, அந்தப் படத்தின் பாடல்களும், வெற்றியும் ஜிவியை திரும்பிய பக்கமெல்லாம் கொண்டுபோய் சேர்த்திருந்தது. கரிசல் மண் பூமியில் கந்தக நெடி கலந்த காற்றெங்கும் பற்ற வைக்காமலேயே வெடித்துச் சிதறி பரவிச்சு ஜி.வி.பிரகாஷின் இசையும் பாடல்களும்.

டபுள் ஆஸ்கார் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் சிஸ்டர் சன்-ஆன ஜி.வி.பிரகாஷ் சின்னஞ்சிறு பாலகனா இருந்தச்சே ரஹ்மான் இசையில் ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் நினைவிருக்கில்லா? அதன் மூலம் திரைத் துறைக்குப் பாடகரா என்ட்ரியானார். அப்பாலே 90-களில் ரஹ்மான் மியூசிக்கி ஏகப்பட்ட பாடல்களில் சிறுவர்களுக்குப் பாடினார்.

அப்பாலே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் உதவியாளராக அந்நியன், உன்னாலே உன்னாலே -னு மெகா ஹி படங்களில் ஒர்க் செஞ்சார்.

அந்த ’ஜென்டில்மேன்’ படத்தின் இயக்குநராக அறிமுகமாகி இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துவிட்ட ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வசந்தபாலன். அவர் இயக்கிய சினிமாதான் ‘வெயில்’.தொடர்ந்து ரிலீஸான ‘ஓரம்போ’, ‘கிரீடம்’ என திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான அந்த வருடத்தில் 3 திரைப்படங்களுக்கு ஜிவிதான் மியூசிக் டைரக்டர். இந்தப் படங்களும் படத்தின் பாடல்களும் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் குட் ரெஸ்பான்ஸ்.

இதையடுத்து 2007-ல் இயக்குநர் வெற்றிமாறனுடன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் ‘பொல்லாதவன்’. ஆமாங்க.. சினி ஃபீல்டில் அறிமுகமான 4-வது திரைப்படத்தில் தனது மெகா ஹிட் பிளாக்பஸ்டர் வெற்றியை சுவைச்சார் ஜி.வி.பிரகாஷ். அப்போவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, இந்தக் கூட்டணி இணையும் படங்கள் வெளியாகும்போது அந்த ஆண்டின் விருது பட்டியல்களை சரிபார்த்துக் கொள்ளோணும் என்று. இந்தப் படத்தில் இருந்து உருவானதுதான் வெற்றிமாறன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி. ‘பொல்லாதவன்’ படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டியெல்லாம் பரவி கிடக்க, பல்சர் பைக்கெல்லாம் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டன. அதன்பிறகு தமிழ்நாட்டின் எந்த வண்டியை ரிவர்ஸ் எடுத்தாலும் கேட்க நேரிடும் ‘பொல்லாதவன்’ மியூசிக் ஜி.வி.பிரகாஷின் முகத்தை ஒரு நிமிடம் கொண்டுவந்துச்சு.

ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் பீஃல்டில் நிலைச்சிருக்க ஹிட் அடிக்கும் ஸாங்க்ஸ் மட்டும் போதாது. பேக்ரவுண்ட் மியூசிக்குன்னு சொல்லப்படும் பின்னணி இசைதான் காலம் கடந்தும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும் இல்லையா?. அந்தவகையில் 2012ல் டைரக்டர் அனுராக் காஷ்யப்பின் ‘Gangs of wasseypur’ ஹிந்தி மூவியின்ன் இரண்டு பாகங்களுக்கும் பின்னணி இசையமைச்சிருந்தார் ஜி.வி.பிரகாஷ். உ பி ஸ்டேடின் நிலக்கரிச் சுரங்கத்தில் தொடங்கி நிகழ்கால அரசியல் வரை பேசியிருக்கும் அந்த படத்தின் பின்னணி இசை ஜி.விக்கு ஆல் இண்டிய லெவலில் செம ரெஸ்பான்ஸைப் பெற்றுத் தந்துச்சு. ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டப்படும் துரோகத்தையும், பழிவாங்கலையும், காதலையும் தழுவி வெளிவந்த அத்திரைப்படத்துக்கு ஜி.வியின் இசை குடுத்த வெயிட் வேற லெவல்..

அந்த வரிசையில் 2015-ல் டைரக்டர் மணிகண்டனுடன் ‘காக்கா முட்டை’ படத்தில் இணைஞ்ச ஜி.வி, சென்னைப் பெருநகரின் பெருமைகளில் ஒன்றான் வற்றாத கழிவுநீர் கூவத்தின் கரையில், வாழும் மக்களின் குடிசைக்குள் வானத்தையும் வானவில்லையும் கொண்டு சேர்த்த படம் அது.

அடுத்தாப்லே 2016-ல் ரிலீஸான வெற்றிமாறனின் ‘விசாரணை’, 2019-ல் வெளிவந்த ‘அசுரன்’ மற்றும் 2020-ல் வெளிவந்த இயக்குநர் சுதா கொங்கராவின், ‘சூரரைப்போற்று’ மாதிரியான டங்கள் ஜி.வி.பிரகாஷின் இசைப் பயணத்தில் மட்டுமின்றி, இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படங்களாக்கிய பெருமை இன்னிய பர்த் டே பாயான ஜிவிபி-க்குண்டு.

இதை எல்லாம் தாண்டி ஏகப்பட்ட சோசியல் இஷ்யூவுக்காக தைரியமாக குரல் கொடுப்பவரிவர்.

கூடவே மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வாறார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர், சிறந்த பாடகர், நல்ல நடிகர் எனும் புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் என்பதைத் தாண்டி, தனது வாழ்வில் தொடர்ச்சியாக அவமானங்களையும், தோல்விகளையும் கண்டவர் இந்த ஜி.வி.பிரகாஷ். முத தபா கதாநாயகனாக நடித்தபோது, தனது உயரத்துக்காகவும், குரலுக்காகவும் கடும் கேலிக்கு உள்ளானார். ஆனால், தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தற்போது உருவாக்கிபுட்டார். வாழ்வில் முன்னேற துடிக்கும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த் டே சொல்லிடுவோமா?

error: Content is protected !!