‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட் சீசன் 2’ பல புது கதாபாத்திரங்கள், தீர்க்கப்படாத புதிர்கள் மற்றும் புதிய கதைக்களத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.
Read More
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ' டூரிஸ்ட் ஃபேமிலி '. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.   திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது... எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார், ரொம்ப சந்தோஷம். நன்றி அங்கிள். அப்பறம் சிம்ரன் மேம், உங்க கூட…
Read More
ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித்…
Read More
KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்! திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama…
Read More
’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை…
Read More
ரோபோ சங்கர் நாயகனாக நடிக்கும் அம்பி விரைவில் திரைக்கு வருகிறது !!

ரோபோ சங்கர் நாயகனாக நடிக்கும் அம்பி விரைவில் திரைக்கு வருகிறது !!

T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு " அம்பி "  என்று பெயரிட்டுள்ளனர்.  மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக  கலக்கிக்  கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.  மற்றும்  ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி  மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள். கலை இயக்குனராக அன்பு பணியாற்றியுள்ளார். வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குனராகவும், கார்த்திக் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.  மக்கள் தொடர்பு -  புவன் செல்வராஜ். தயாரிப்பு : T2 மீடியா - F.பிரசாந்தி பிரான்சிஸ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J எல்வின். படம் பற்றி இயக்குனர் பாஸர் J எல்வின் பேசியதாவது... இது முழுக்க முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம். இந்த கதையின் நாயகன் நிஜத்தில்  அம்பியாக ,அப்பாவியாக , பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அன்னியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய  நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும்  என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது என்கிறார் இயக்குனர் பாஸர் J எல்வின். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விண்வெளி நாயகன் டாக்டர் கமலஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கோடை கொண்டாடமாக வரும் 9 - ம் தேதி நூற்றுக்கு  மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. திரைப்பட குழுவினர் அனைவருக்கும் கலந்துகொண்டு படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
Read More
’ரெட்ரோ’ திரை விமர்சனம் !!

’ரெட்ரோ’ திரை விமர்சனம் !!

இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் - சூர்யா , பூஜா ஹெட்கே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - 2D எண்டர்டெயின்மெண்ட் - ஜோதிகா, சூர்யா. மாறுபட்ட களங்களில் நல்ல படைப்புகளை தொடர்ந்து தரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம். கங்குவாவின் தோல்வியில் இருந்து அவரை மீட்டெடுத்துள்ளதா? பார்க்கலாம் காதலுக்காக வன்முறை அனைத்தையும் விட்டுவிட்டு அமைதியாக வாழ நினைக்கும் ஒருவனை, அந்த வன்முறை துரத்தி கொண்டே இருக்கிறது. அந்த வன்முறை தனக்குள் ஏன் இருக்கிறது என்பதை அவன் கண்டுபிடிப்பதும் அதில் இருந்து விலகுவதும் தான் ரெட்ரோ. ஒரு கேங்க்ஸ்டர் கதையாக ஆரம்பித்த ஒரு கதை, அடிமை மீட்பு என்ற புள்ளியில் முடிகிறது. வித்தியாசமான கதையை கட்டமைத்த கார்த்திக் சுப்புராஜ், முதல் ஆக்ட்டில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, இரண்டாவது ஆக்ட்டில் குழப்பத்திற்குள் சென்று, மூன்றாவது ஆக்ட்-ல் பாதி நிறைவோடு வெளியேறுகிறார். சிறப்பான…
Read More
டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கிறது ?

டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கிறது ?

இயக்கம் - அபிஷன் ஜீவிந்த் நடிகர்கள் - சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர் , கமலேஷ் இசை - ஷான் ரோல்டன் தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோ - பசிலியன் நசீரத், மகேஷ் ராஜ் பசீலன் சமீபத்தில் வந்த டீசர்களிலேயே அதிக பரபரப்பை கிளப்பியது இந்தப்பட டீசர் தான். அத்தனை எமோசன் நகைச்சுவை என எல்லாம் கலந்து அசத்தியிருந்தார்கள் ஆனால் இந்தப்படத்திலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு முக்கியமில்லை. டீசர் டிரெய்லர் பார்த்து நிறைய எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் முதலில் அதை மறந்து விடுங்கள். அந்தளவு படமில்லை… ஆனால் அதற்காக மோசமுமில்லை.. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக…
Read More
நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - சைலேஷ் கோலனு நடிகர்கள் - நானி , ஶ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஶ்ரீநிவாஸ், சமுத்திரக்கனி இசை - மிக்கி ஜே மேயர் தயாரிப்பு - வால் போஸ்டர் சினிமா - பிரசாந்தி தி ்பிரிபநனி - நானி நானி தயாரிப்பில், உருவான ஹிட் திரைப்படம் படுபயங்கர ஹிட்டாக, அது தொடர் திரைப்படமாக உருவாக ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது படத்தில், அவரே நாயகனாக நடித்துள்ளார். தற்போதைய சீசனில் வயலன்ஸ் அதிகம் இருப்பது மாதிரி படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளது, இந்த கதைத் தொடரின் மையமே வலன்ஸ் என்பதால் அது சரியாக பொருந்தியுள்ளது. நானி அடுத்த வீட்டு பையன் ரோலில் இருந்து மாறி தன் கேரியரிலேயே மிக வயலன்டான படத்தில் நடித்துள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்தும் இருக்கிறது. முந்தைய இரண்டு பாகங்களில் தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் படமாக இருக்கும் ஆனால் இந்த பாகம், கொலைகள்…
Read More
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ வெளியாகியுள்ளது!

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ வெளியாகியுள்ளது!

  தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது. ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான…
Read More