#STR49 திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது !!

#STR49 திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாக நடைபெற்றது. விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிலம்பரசன் TR கல்லூரி மாணவனாக நடிக்கிறார். பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிலம்பரசன் TR உடன் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார். இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த நாயகி கயாடு லோஹர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் VTV கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் பல பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கி வரும், Dawn Pictures சார்பில்,…
Read More
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தினை இயக்கியுள்ளார். சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்…
Read More
வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது. இந்த அதிரடி…
Read More
துல்கர் சல்மானின், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது!

துல்கர் சல்மானின், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது!

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான "ஐ அம் கேம்" படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப் படக்குழுவினர் கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர். தமிழின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஆணட்னி வர்கீஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் பிளாக்பஸ்டர் “RDX” படத்தைத் தந்த நஹாஸ் ஹிதாயத் இயக்குவது இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில்,…
Read More
நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை  வெளியீடு !!

நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை வெளியீடு !!

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ' லெவன் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'லெவன்' டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 'லெவன்' முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை…
Read More
சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன் தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான, “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் வீடியோ, 1960களின் வட தெலுங்கானா – மகாராஷ்டிரா பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும்…
Read More
Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது

  இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.   உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.   இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.   இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.   Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன…
Read More
வாழ்த்துப் பாடல் பாடி படக்குழுவினரை வாழ்த்திய கங்கை அமரன்!

வாழ்த்துப் பாடல் பாடி படக்குழுவினரை வாழ்த்திய கங்கை அமரன்!

  ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக். இந்த 'குற்றம் தவிர் 'படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 'குற்றம் தவிர் ' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன்…
Read More
கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!

கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் மறைவை முன்னிட்டு நினைவு அஞ்சலி கூட்டம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் & சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது, ”என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே கலைப்புலி சேகரன் எனக்கு பழக்கம். அவருடன் பல நல்ல நினைவுகள் சம்பவங்கள் இருக்கிறது. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவோம். அவரது கதைகளை கேட்டு மெய்சிலிர்த்து இருக்கிறோம். கலைப்புலி சேகரன் கதை சொன்னால் யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்குத் திறமையானவர். ரஜினி, கமல், பிரபுதேவா, கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு…
Read More

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்!!

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான…
Read More