‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ' அங்கீகாரம் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப், போன்ற முன்னணி…
Read More
‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன்…
Read More
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்” !!

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்” !!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Read More
ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்

ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது இதுபோன்று சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நல்ல படங்களுக்கு வாசலை திறந்துவிடும் விதமாக ஒரு விடிவெள்ளியாக மாறி ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் (SRiNIK PRODUTIONS) நிறுவனம். ஸ்ரீனிக் புரொடெக்ஷன்ஸ் சதீஷ்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் இருவரும் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் சாதித்தவர்கள். சினிமாவின் மீதான ஆரவத்தில், ராமராஜன் நடிப்பில் வெளியான ‘சாமானியன் படத்தின் இணை தயாரிப்பாளராக மாறினார்கள் அதே சமயம் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுவதற்கு பதிலாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் நல்ல படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்து ரிலீஸ் செய்யும் புதிய…
Read More
சமூக போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக பேசும் – மையல் !!

சமூக போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக பேசும் – மையல் !!

”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர்  APG  ஏழுமலை! மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் APG ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரைய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ மே 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்து இயக்குநர் APG ஏழுமலை பகிர்ந்து கொள்கிறார். அவர் பகிர்ந்து கொண்டதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. நடிகர்கள்…
Read More
‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் 'என்.டி.ஆர். நீல்' திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை! ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் 'வார்2' திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது. இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, "ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று…
Read More
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது… என்னை நம்பி இத்தனை…
Read More
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் #சூர்யா 46 !!

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் #சூர்யா 46 !!

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'புரொடக்ஷன் நம்பர் 33 - #சூர்யா 46 ' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் - தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ' #சூர்யா 46' - சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின்…
Read More
யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'போர் ' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 2' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்…
Read More
‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் 'HIT 3'. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. "இந்த பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது" என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். "அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்‌ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்". நேஷனல் லெவல் பாக்ஸர் அனில் உதவியுடன் ஆக்‌ஷன் சீக்வன்ஸூக்காக கடின பயிற்சியும் எடுத்துள்ளார் கோமலி. " நான்…
Read More