05
Oct
தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது. "தளபதி 69" படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய 'தளபதி' விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார்.…