தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

சொர்க்கவாசல்

இன்று முதல் திரையரங்குகளில்

சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இது தான் படத்தின் மையம். அப்பாவி ஒருவன் அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டால் என்னாகும்? என்பது தான் ஒன் லைன்.

உண்மை சம்பவங்களை டீடெயிலான திரைக்கதையாக்கி, அட்டகாசமான படமாகத் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஆனால் தமிழில் அது பெரிதாக நடந்ததே இல்லை.

இங்கு உண்மையைச் சொன்னால், பிரச்சனை வந்து விடும். மூலைக்கு மூலை நியாயவான்கள் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அசுர உழைப்புடன் பக்கா டீடெயிலுடன், ஒரு அருமையான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள் சொர்க்கவாசல் படக்குழுவினர்.

டிரெய்லர் பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்தீர்களானால், படத்தை கண்டிப்பாக பார்த்து விடுங்கள் படம் உங்களை ஏமாற்றாது.

ஜெயிக் கலவரம் ஒரு கேயாஸ்! அதைச்சுற்றி கதை எழுதும்போது, எக்கசக்க கேரக்டர் இருக்கும், அதை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுவது, இன்னும் கஷ்டம், இதில் விசாரணை வழியே அந்த கலவரத்தின் பின்னணியை அலசுவதாக திரைக்கதையை அமைத்த விதம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒவ்வொரு முடிச்சாக அதன் வழியே அவிழ்க்கும் சஸ்பென்ஸும் கரெக்டாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தமிழில் சமீபத்தில் இவ்வளவு டீடெயிலான திரைக்கதை பார்க்கவே இல்லை. ஜெயிலும் அதன் நடைமுறைகளும் கொஞ்சம் விலாவரியாக வருகிறது. ஜெயில் செட்டிங்கில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு, மியூசிக், துணை நடிகர்களின் உழைப்பு என படம் முழுக்க படக்குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது.

ஆர் ஜே பாலாஜி முதல் முறையாக நடித்திருக்கிறார். செல்வராகவன் தப்பான காஸ்டிங், அத்தனை வலுவான டான் கேரக்டரை அவரால் தாங்க முடியவில்லை என்று தான் தோன்றியது.

ஆச்சரியம் தந்தது கருணாஸும், நட்டியும். உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். கருணாஸ் கேரக்டர் ஆர்க் செம்மையாக இருந்தது. நட்டி வரவர மெருகேறிக்கொண்டே போகிறார்.

கேமரா அற்புதம் தான், ஆனால் எடிட்டிங் ஒரு படத்திற்கு எத்தனை பலம் என்பது இந்த படத்தில் நிரூபணமாகியிருக்கிறது. முன் பின்னாக நகரும் கதையில், திரைக்கதையோடு எடிட்டிங் எழுதப்பட்ட மாதிரியே இருக்கிறது. எடிட்டர் பின்னியிருக்கிறார்.

சரி இப்போது கொஞ்சம் மைனஸுக்கு வரலாம்

படம் பார்த்திவிட்டு படியுங்கள் கொஞ்சம் ஸ்பாய்லர் உண்டு.

படம் முழுக்க முழுக்க, நடந்த சம்பங்களை வைத்து, எழுதப்பட்டிருப்பதால் ஒரு டாக்குமெண்ட்ரித் தனம் இருந்து கொண்டே இருக்கிறது.

இங்கு ஜாதிய அரசியலை, அதிகாரத்தை எதிர்த்து எதுவும் நடக்காது, எளியவனுக்கு அத்தனை எளிதில் எல்லாம் தீர்வு கிடைத்து விடாது என்பது உண்மை. ஆனால் இந்த உண்மையைப் படத்தில் சொன்னால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

படத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ எதுவுமே புத்திசாலித்தனமாக செய்யவில்லை, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை,
ஹீரோ எதிர்த்து ஜெயிக்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் அது இப்படத்தில் இல்லை.

அப்புறம் வன்முறை
தமிழ் சினிமா ஹீரோ 100 பேரை அடிக்கும் லோகேஷ் ஸ்டைல் வன்முறையை ஆடியன்ஸ் கொண்டாடுவார்கள்.
உண்மையான வன்முறையை காட்டினால் உதறல் வந்து ஓடி விடுவார்கள்.

இது இரண்டையும் ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இன்னொன்று படத்தில் மையக்கேரக்டராக நிறைய கேரக்டர்கள் வருகிறது, நாம் யாரை ஃபாலோ செய்ய வேண்டும் என்று ஒரு குழப்பம் வந்து விடுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி கண்டிப்பாக இது தமிழ் சினிமாவின் முக்கியமான படம். Don’t miss it

அப்புறம் சில படங்களுக்கு மட்டும் முன்கதை தெரிந்தால் படம் படு சுவாரஸ்யமாக இருக்கும்.

அந்தக்கலவரத்தின் போது ஆந்தைக்குமார் சார் செய்த ரிப்போர்டின் தகவல் இது. படித்து விட்டு படம் பாருங்கள்

சென்னை மக்களால் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இந்தக் கலவரம் நடந்தது நம்ம சென்டரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் இருந்த பழைய மத்திய சிறைச்சாலையில்.

அந்த ஜெயிலில், பயங்கர தாதா பாக்சர் வடிவேலு 1999-ம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டு இருந்தான். வயிற்றுப்போக்கு காரணமாக 16.11.99 அன்று இரவு அவனை சிறை மருத்துவமனையில் சேர்த்தாய்ங்க.ஆனால் வடிவேலுவின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவனை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாய்ங்க. ஆனா சிகிச்சை பலனின்றி பாக்சர் வடிவேலு 17ம் தேதி இறந்துட்டான்.

ஆனால் அந்த பாக்சர் வடிவேலுவை சிறை அதிகாரிகள் அடிச்சே கொன்னுப் புட்டடதா சிறைக்குள் தகவல் பரவிபுடுச்சு. இதையடுத்து காலையில், சிறையில் கைதிகள் பெரும் கலவரத்தில் குதிச்சுப்புட்டாய்ங்க. இந்த கலவரத்தின்போது ஜெயிலர் ஜெயக்குமார் கொடூரமா தீ வைத்து கொல்லப்பட்டார்.

அதாவது அப்போ ஜெயிலில் இருந்த வெள்ளைரவி, பர்மா சீனு, கொடுக்கு, டிக்கி, திருவள்ளூர் விஜி உள்பட பல ரவுடிங்க ஒன்று சேர்ந்து, துணை ஜெயிலர் ஜெயக்குமார் முன்பு நீதானே பாக்சர் வடிவேலை கொலை செஞ்சாய் என்று கோஷமிட்டாய்ங்க். சில மாசங்க்களுக்கு முன்னரே சென்னை ஜெயிலுக்கு டூட்டிக்கு வந்த ஜெயக்குமார் ரொம்ப யோக்கியர்..

அதுனாலே தனக்கு எதிரா கோஷம் போட்டவிய்ங்களை ஜெயக்குமார் மற்றும் வார்டன்கள் துரை, அய்யப்பன், யுவராஜ் சமாதானப்படுத்தினாய்ங்க. ஆனா பர்மா சீனு உள்ளிட்ட சிலர் ஜெயக்குமாரை இழுத்துக்கினு, சிறை அலுவலக அறையில் தள்ளிபுட்டாய்ங்க. அவரை அங்கே பர்மா சீனு, அரிசி மூட்டையை தூக்கும் குத்தூசியால் குத்தினான் . அப்பாலே அந்த அறையில் இருந்த ஆவணங்களில் தீ வைச்சு, ஜெயக்குமாரை அந்த தீயினுள் போட்டானுஹ. அவர் தீயில் கருகி இறந்தார்.

சுமார் 2 ஆயிரம் கைதிகள் இந்த கலவரத்தில் ஈடுபட்டாய்ங்க. கலவர கும்பலை நோக்கி அப்போ சூப்பிரரண்டெண்ட் ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கலவரம் அடங்கலை. எனவே அதை அடக்குவதற்கு சென்னை நகர போலீசின் உதவி நாடப்பட்டுச்சு. அப்ப சென்னை டெபுடி கமிஷனரா ஜஸ்பர் ராஜாசிங் தலைமையில் போலீசார், சிறைக்குள் வந்தாய்ங்க. அவிய்ங்க கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜெயபால், மணி, பாபு, காதர் ஆகியோர் செத்து போனாய்ங்க. அதுனாலே கலவரம் ஒரு வழியா அடங்கிச்சு. ஆனா அந்த கலவரத்தில் 40 போலீசார், 40 சிறை அலுவலர்கள், 63 கைதிகள் காயமடைஞ்ச்சாய்ங்க

இப்ப இந்த சம்பவம் ஏன் என்போருக்கு-

இந் நிகழ்வை லைவ் ரிப்போர்ட் செஞ்சவன் அடியேன்.. ( ஆந்தைக்குமார் ) இப்போது வந்திருக்கும் சொர்க்கவாசல் படம் இந்த கதை தான்.