“ஷாஜாம்! ஃபியூரி ஆஃப் தி காட்ஸ்” திரை விமர்சனம் !!

0
66

 

பாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களில் DC comics க்கு தனி இடம் உண்டு DC comics யுனிவர்ஸிலிருந்து, 12 வது படமாக வந்துள்ளது இந்தப்படம். Shazam (2019) படத்தின் அடுத்த இரண்டாம் பாகமாக இந்தப்படம் வந்துள்ளது.

பொதுவாக DC சூப்பர்ஹீரோக்கள் கொஞ்சம் டார்க்காக இருப்பர்கள் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு Shazam கலர்ஃபுல் காமெடியாக வந்துள்ளது.

ஷாஜாம் முதல் பாகம் விட்ட இடத்திலிருந்து கதை தொடர்கிறது. முதல் பாகத்தில் இருக்கும் மந்திர மாயகோலை பண்டைய கால மந்திர விக்கிகள் இருவர் எடுத்து உலகை ஆள திட்டமிடுகிறார்கள் அதை ஷாஜாமும் அவனது நண்பர்களும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதை.

அதிரடி ஆக்சன், பிரமாண்டம், காமெடி என கொஞ்சம் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் டிசி காமிக்ஸ்க்கே உண்டான அழுத்தமான கதை இல்லாதது வருத்தம். டிசி காமிக்ஸ் தலைமையில் நிகழும் குழுப்பங்கள் கதையிலும் எதிரொலிக்கிறது. ஷாஜாமாக ஜாக்கரி லெவி அட்டகாசம் பண்ணுகிறார். ஆனால் படத்தின் கதை மீது சுவாரஸ்யம் இல்லாததால் நமக்கு எதிலும் ஈர்ப்பே இல்லை. ஷாஜாமுடன் இணைந்து நிறைய சூப்பர் ஹீரோக்கள் கணக்கில்லாமல் வருவதும் சூப்பர்ஹீரோ பிம்பத்தையே உடைக்கிறது.

டெக்னிகல் தொழில் நுட்பங்கள் சிறப்பாக வந்துள்ளது. வொண்டர் வுமன் கேமியோ ஆச்சர்யம். அது போல் ஆச்சர்யம் கதையிலும் இருந்திருக்கலாம்.

ஹாலிவுட் ஆக்சன் பட விரும்பிகள் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம்.