இயக்கம் – மகேஷ் பாபு
நடிகர்கள் – அனுஷ்கா, நவீன் பொல்லி ஷெட்டி , துளசி
இசை – ரதன்
தயாரிப்பு – வம்சி கிருஷ்ணா
அமெரிக்காவில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகி . தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணம் செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார். தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு Sperm Donor மட்டுமே, அதற்காக சரியான ஆளை தேடுகிறார். அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார். அவர் இதற்கு சரியாக இருப்பாரா? இல்லையா? அதன் பின்னர் என்ன நிகழ்கிறது என்பதே மீதிக்கதை.
படத்தின் ஐடியா அட்டகாசம் இன்றைய தலைமுறை சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை தந்துள்ளார்கள், மேலும் ஒளிப்பதிவு மிகவும் அழகாக உள்ளது,
பின்னணி இசை படத்தை தக்க வைக்க உதவியுள்ளது , இயக்குனர் ரசிகர்களின் உணர்வை தக்க வைத்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார், பாகுபலி படத்திற்கு பிறகு இப்படம் அவருக்கு பேசப்படும் அளவுக்கு ஒரு படமாக அமைந்துள்ளது, கதாநாயகன் நவீன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், அவரின் ஒன்லைன் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
கதைக்களம் மெதுவாக நகர்வது போல இருப்பதால் சில இடங்களில் தொய்வாக உள்ளது, எனினும் மொத்த படமும் முடிந்ததும் நமக்கு ஒரு திருப்தி தருவது போன்ற உணர்வை கொடுக்கிறது.
மொத்தத்தில் ஃபீல் குட் பட ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.