“காபி வித் காதல்” திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்திய ஓடிடியில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நட்சத்திர நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர் நவம்பர் 4, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிசம்பர் 9, 2022, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதில் சுந்தர் சி வல்லவர். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான ‘காபி வித் காதல்’ பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்களின் அட்டகாச நடிப்பு மற்றும் அழகால் கொள்ளை கொள்ளும் அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ரைசா வில்சன்என நட்சத்திர கூட்டத்தின் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட இப்படம் இளைஞர்கள் மனதை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ZEE5 தளத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான திரைப்படங்களை ZEE5 வழங்கியது. அதில் குறிப்பாக, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்கள் குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘காபி வித் காதல்’ அந்த வெற்றி வரிசையில் இணைந்துள்ளது.

ZEE5 புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய இணையதொடர்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது.