Latest Posts

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து...

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

நம் நாட்டில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்...

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக...

71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில்...

வில்லன் என்று யாருமே இல்லாத காதல் படம், ‘மழையில் நனைகிறேன்’!

அன்சன் பால், ரேபோ மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா,மாத்யூ வர்கீஸ் , அனுபமா குமார், சுஜாதா பஞ்சு , வெற்றிவேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் பலர் நடிப்பில் டி சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் மழையில் நனைகிறேன் . ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ்குமாரும் அவரது மனைவி ஸ்ரீவித்யா ராஜேஷும் தயாரித்த இப் படத்தின் நாயகி ரேபோ மோனிகா ஜான் பிகில் படத்தில் நடித்தவர். இதில் கவின் பாண்டியன் என்பவரோடு சேர்ந்து வசனம் எழுதி இருக்கிறார் இயக்குனர் விஜி .ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்ற விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு கல்யான், படத் தொகுப்பு ஜி பி வெங்கடேஷ்.

சென்னையில் நடைபெறும் உலகப் படவிழாவில் திரையிடப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இப் படம் . அடுத்த மாதம் திரைக்கும் வரவிருக்கும் நிலையில், படத்தின் சிறு முன்னோட்டத்தை (டீசர்) பத்திரிக்கையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் படத் தொகுப்பாளர் வெங்கடேஷ் மூவரும் .

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் வேறு எந்த மதமும் பிரச்னை இல்லை என்ற வசனத்துடன் துவங்கும் அந்த சிறு முன்னோட்டத்தில், மழை பெய்யும் பின்னணியில் ஒரு இளம் காதல் ஜோடியின் காதல், நாயகனுக்கும் அவனது அப்பாவுக் குமான வாக்குவாதம், காதலன் காதலி சிணுங்கல்கள், ஒரு சண்டை சீன் எல்லாம் இருந்தது. போ என்ற வார்த்தையின் மூலம் வா என்று சொல்கிறாய் என்று ஒரு கவிதைப் பூர்வமான வசனமும் மணத்தது.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் டி சுரேஷ் குமார், ” இது மனசை இலேசாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சி யான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது.

இன்னும் கொஞ்சம் டிப்ஸ் மாதிரி சொல்றதானா இஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும் படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கும் ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இது போன்ற காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது . அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது . படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சியும் கடைசிக் காட்சியும் மழையில் நடக்கும்.அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர். காதலும், மழையும் எல்லோருக்கும் பிடிப்பது மாதிரி எல்லோருக்கும் இந்தப் படமும் பிடிக்கும்” என்றார் .

தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் , “படத்தின் கதையை இயக்குனர் சொன்ன விதமும் குறிப்பாக க்ளைமாக்ஸ் போர்ஷனும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் செய்தது . அதனால் தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் . சென்னை, புதுச்சேரி, அரக்கு வேலி போன்ற இடங்களில் ஷூட் செய்தோம். காதல் கதை என்றாலும் இது குடும்பத்தோடு எல்லோரும் பார்க்க முடிகிற பார்க்க வேண்டிய படம். இது எனது முதல் படம். தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன் ” என்றார் .

அடிசினல் சேதி :

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆடை வடிவமைப்பை செய்திருப்பதோடு பாடலும் பாடி இருக்கிறாராக்கும்

Latest Posts

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து...

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

நம் நாட்டில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்...

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக...

71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில்...

Don't Miss

அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர் டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர்...

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சென்னை சர்வதேச திரைப்படவிழாவிலும் சிறந்த நடிகைக்கான விருது!

சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ பெற்றுவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சென்னை...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி சங்க தலைவரானார் விடியல் ராஜூ!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் அமைப்புக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தயாரிப்பாளர் விடியல் ராஜுவுக்கு வாழ்த்துகள்.. உங்களது தலைமையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் உத்வேகத்துடன் செயல்பட்டு தயாரிப்பாளர்களுக்கு வீட்டு...

படத்தை ரிலீஸ் செய்வதில் டென்ஷன்! – ‘ சங்கதலைவன்’ தயாரிப்பாளர் வெற்றிமாறன் பேச்சு!

'தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை...

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா பத்திரிகை தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்.!

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு பத்திரிகை தொடர்பாளராக இருந்து வருபவர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.